பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
வரவேற்பு கிடைக்காமல் திணறும் லேடி சூப்பர் ஸ்டார்: அன்னபூரணி நிலை என்ன?.!
இந்திய திரையுலகில் முன்னணி நடிகையாகவும், தமிழில் முதல் தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகையாகவும் இருப்பவர் நயன்தாரா. கடந்த 2003ம் ஆண்டு மலையாளத்திலும், 2005ல் தமிழிலும் அறிமுகமாகி, இன்று லேடி சூப்பர்ஸ்டாராக தமிழ்நாட்டில் இருக்கிறார்.
கடந்த சில ஆண்டுகளாகவே நயன்தாரா பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வழங்கும் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதில் கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்று இருந்தன.
அதேவேளையில், மாயா, நெற்றிக்கண் உட்பட பல படங்கள் வரவேற்பை பெற்றாலும், அடுத்தடுத்த நாட்களில் ஏமாற்றத்தை தந்து எதிர்பார்த்த வெற்றியை அடையவில்லை. அந்த பட்டியலில் அன்னபூரணியும் இணைந்துள்ளதாக களத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
பல தோல்விகளுக்கு பின்னர் வெற்றி என்பது திரைத்துறையில் இயல்பானது. அந்த வெற்றிக்காக நயன்தாரா தொடர்ந்து ஓடிக்கொண்டு இருக்கிறார்.