#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. நடிகை நீலிமா ராணிக்கு இரண்டாவது குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்!!
தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக இருப்பவர் நீலிமா ராணி. அதன் பின்னர் அவர் விரும்புகிறேன், தம், மொழி, ராஜாதி ராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல, பண்ணையாரும் பத்மினியும், குற்றம் 23 என பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும் நீலிமா சன் டிவி, விஜய் டிவி என பல முன்னணி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். அவர் தொடர்களில் ஹீரோயினாக மட்டுமின்றி,வில்லியாகவும் நடித்து மிரள வைத்துள்ளார். 21வயதிலேயே திருமணமான நீலிமாவிற்கு ஏற்கனவே அழகிய பெண் குழந்தை உள்ளது. இந்த இந்நிலையில் அவர் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நீலிமா அவ்வப்போது தனது கர்ப்ப கால போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இந்த நிலையில் அவருக்கு கடந்த ஜனவரி 5ஆம் தேதி மீண்டும் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரே மிகவும் மகிழ்ச்சியுடன் தற்போது தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.