19 வருஷத்திற்கு பிறகு அம்மாவிற்கு இரண்டாவது குழந்தை! அக்காவான ஹேப்பியில் பிரபல விஜய் டிவி நடிகை வெளியிட்ட வீடியோ!!



actress-neha-mother-gives-birth-to-girl-baby

சன் தொலைக்காட்சியில் முன்னணி நடிகை ராதிகா நடிப்பில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று, இல்லத்தரசிகளின் ஆதரவை கொண்டிருந்த தொடர் வாணி ராணி. இதில் குழந்தை நட்சத்திரமாக தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நேஹா. இவர் பைரவி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் அறிமுகமானார்.

அதனைத் தொடர்ந்து நேஹா பிள்ளை நிலா மற்றும் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சித்தி 2, விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாக்யலக்ஷ்மி ஆகிய தொடர்களில் நடித்து வருகிறார். மேலும் அவர் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் 19 வயது நிறைந்த நடிகை நேஹாவின் அம்மாவிற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளது.

இதுகுறித்து மிகவும் மகிழ்ச்சியுடன் நேஹா வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், என் அம்மா கர்ப்பமாக இருந்தார். 8 மாதம். இந்நிலையில் அவர் பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். தாய்க்கும், குழந்தைக்கும் தயவுசெய்து உங்களது ஆசியை வழங்குங்கள். ஒரு அக்காவைவிட தாயாக உணர்கிறேன் என மிகவும் சந்தோசமாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் நெட்டிசன்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.