#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கார் ஓட்டிக்கொண்டே பிரபல நடிகை செய்த காரியம்! வைரலாகும் வீடியோ!
பல்வேறு தொலைக்காட்சி தொடர்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானவர் நடிகை நிவேதா தாமஸ். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல்வேறு தொடர்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். அதன்பின்னர் வெள்ளித்திரை பக்கம் சென்ற இவர் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராகவும் உள்ளார்.
உலகநாயகன் கமலகாசன் நடிப்பில் வெளியான பாபநாசம் படத்தில் கமலுக்கு மகளாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். விஜய்க்கு தங்கையாக ஜில்லா படத்தில் நடித்திருந்தார். நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நவீன சரஸ்வதி சபதம் படத்தில் நடித்திருந்தார் நிவேதா.
தமிழில் அவ்வளவாக வாய்ப்புகள் இல்லாவிட்டாலும் தெலுங்கு திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உள்ளார் நிவேதா தாமஸ். இந்நிலையில் இவரது வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு ராப் பாடலை கார் ஓட்டிய படியே முழுவதும் பாடியுள்ளார் நிவேதா தாமஸ். அதை பார்த்தவர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் நிவேதா சீட் பெல்ட் அணியாமல் கார் ஒட்டியதாகவும், இப்படி கார் ஓட்டும் போது அஜாக்கிரதையாக பாட்டு பாடுவதும் சரியா என சில ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.