#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சினிமா துறையில் பாலியல் தொல்லை இருப்பது உண்மைதான். ஸ்ரீரெட்டியை அடுத்து களமிறங்கிய பிரபல நடிகை!
தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பலபேர் தன்னை பாலியல் ரீதியாக கொடுமை படுத்தியதாக நடிகை ஸ்ரீ ரெட்டி பரபரப்பை கிளப்பி வருகிறார்.
இந்நிலையில் நெஞ்சிருக்கும் வரை படத்தில் நாயகியாக நடித்த பூணம் கவுர் அதே புகாரை தெரிவித்திருப்பது சினிமா துறையை பற்றி மேலும் அச்சுறுத்துவதாக அமைந்துள்ளது.
இயக்குனர் சந்திரசேகர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெட்ரா திரைப்படம் நெஞ்சிருக்கும் வரை. இத்திரைப்படத்தில் நாயகியாக பூனம் கவுர் நடித்திருப்பார்.
தமிழ் சினிமாவில் நெஞ்சிருக்கும்வரை படத்தின் மூலம் அறிமுகமானவர் பூனம் கவுர். இவர் ‘பயணம்’, ‘என் வழி தனி வழி’, 6 மெழுகுவர்த்திகள், வெடி உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த இவர், தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் ஒளிபரப்பாகும் சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் சினிமாத்துறையில் படவாய்ப்புக்காக நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் குடுப்பது உண்மைதான். நானும் ஒருமுறை அந்த கொடுமையை அனுபவிக்க கூறி மேலும் தயாரிப்பாளர் ஒருவர் மீது புகார் ஒன்றையும் தெரிவித்தார் பூனம் கவுர்.
இது குறித்து அவர் கூறியதாவது ,முன்னணி தெலுங்கு பட தயாரிப்பாளர் ஒருவர் தன்னுடைய படங்களை பார்த்து புகழ்ந்ததாகவும். மேலும் தனக்கு முன்னணி நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாகவும் கூறி தன்னை அலுவலகத்தில் வந்து சந்திக்க சொன்னார்.
இதையடுத்து நான் எனது அம்மாவுடன் அவரது அலுவலகம் சென்று பார்த்தேன். என் அம்மாவுடன் என்னை பார்த்த அவரின் முகம் சட்டென்று மாறியது. நான் ஏன் அம்மாவுடன் அவர் அலுவலகம் வந்ததை அவர் விரும்பவில்லை போலும். எனவே அந்த தயாரிப்பாளர் என்னிடம் சரியாக பேசவில்லை.ஏனோ தானோவென்று கடமைக்கு பேசினார்.
மேலும் இதுவரை அந்த தயாரிப்பாளர் எனக்கு எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. நான் என் அம்மாவுடன் போகாமல்இருந்திருந்தால் ஒருவேளை எனக்கு வாய்ப்பு வந்திருக்கலாம் .இவ்வாறு சினிமாவில் நடிகைகள் பல தொல்லைகளை அவமானங்களை சந்திக்க வேண்டும் என்று தயாரிப்பாளரின் பெயரை கூடாமல் நடிகை பூனம் கவுர் தெரிவித்தார்.