பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#Breaking: நடிகை பூனம் பாண்டே சாகவில்லை.! திடீரென வெளியான உண்மை.!
நடிகை பூனம் பாண்டே இறந்து போனதாக அறிவிப்பு வெளியான நிலையில் அது உண்மை இல்லை என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.
சர்ச்சைக்குரிய நடிகைகளில் ஒருவராக பார்க்கப்பட்டவர் பூனம் பாண்டே. இவர் அடிக்கடி ஏதாவது சர்ச்சைகளை கிளப்பி அதன் மூலம் பிரபலம் அடைய நினைப்பவர். ஏற்கனவே 2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா கோப்பை வென்றால் தான் நிர்வாணமாக கிரவுண்டில் வலம் வருவேன் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தியவர்.
இந்த நிலையில் தற்போது நடிகை பூனம் பாண்டே நேற்று இறந்து விட்டதாக அவரது சமூக வலைதள பக்கத்தில் ஒரு பதிவு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் இன்று அவர் ஒரு வீடியோவில் பேசுகிறார். அந்த வீடியோவில், நான் இறக்கவில்லை கர்ப்பப்பை வாய் புற்றுநோய் காரணமாக இறந்து விட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த கர்ப்பப்பை புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த முயற்சி என்று தெரிவித்த அவர் கர்ப்பப்பை புற்றுநோயின் தீவிரம் குறித்து பலருக்கும் போதிய விழிப்புணர்வு இல்லை.
இது முற்றிலும் குணப்படுத்தக்கூடிய ஒரு நோய் தான். ஆனால் இதற்கான விழிப்புணர்வு இல்லாமல் பலரும் இந்த நோய்க்கு பலியாகி வருகின்றனர். என்று அந்த நோய்க்கான பல்வேறு விளக்கங்களை அவர் கொடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.