பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
என்னது.. 47 வயதில் இரண்டாவது திருமணமா?? உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகை!!
தமிழ் சினிமாவில் 1997 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளிவந்த வீட்ல விசேஷங்க என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரகதி . இவர் தமிழில் சில திரைப்படங்களிலேயே நடித்துள்ளார். மேலும் தெலுங்கில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபல நடிகையாக இருந்துள்ளார். பிரகதி படங்களில் மட்டுமில்லாமல் சீரியல்களிலும் நடிக்கிறார்.
இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அரண்மனைக்கிளி என்ற தொடரில் மாமியாராக நடித்து பெருமளவில் பிரபலமானார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் அவ்வப்போது மாடர்ன் உடையில் புகைப்படங்கள், நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
நடிகை பிரகதி தனது 20 வயதில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அவர் தற்போது இரண்டாவது திருமணம் செய்து கொள்ளப் போகிறார் என தெலுங்கு மீடியாவில் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதனைக் கண்டு கொந்தளித்த நடிகை பிரகதி, இது வெறும் போலியான செய்தி. எழுத வேண்டும் என்பதற்காக எதையும் எழுத வேண்டாம். என்ன ஆதாரத்துடன் இப்படி பொய்யான செய்தியை வெளியிட்டீர்கள். கொஞ்சமாவது பொறுப்புடன் இருங்கள் என விளாசி தள்ளியுள்ளார்.