#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. ராஜா ராணி சீரியல் மாமியாரா இது! உடன் இருக்கும் மெகா ஸ்டார் யாருன்னு பார்த்தீர்களா! தீயாய் பரவும் புகைப்படம்!!
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரியமானவள் என்ற தொடரில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகை பிரவீனா. இவர் மலையாளத்திலும் ஏராளமான தொடர்களில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் சன் டிவியில் மகராசி என்ற தொடரில் மாமியாராக நடித்து வந்தார்.
அந்த தொடரிலிருந்து இடையிலேயே விலகிய பிரவீனா தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு பெற்று வரும் ராஜா ராணி சீரியலில் ஹீரோயினுக்கு மாமியாராக நடித்து வருகிறார். மேலும் சினிமாவில் களமிறங்கிய அவர் நடிகர் கார்த்தியுடன் தீரன் அதிகாரம் ஒன்று, விக்ரமுடன் சாமி 2, ஜெயம் ரவியின் கோமாளி உள்ளிட்ட படங்களிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை பிரவீணா மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் இளம் வயதில் மலையாள மெகா ஸ்டாரான மம்முட்டியுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட செம க்யூட்டான புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.