#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
செம சேஞ்சுல..எப்படியிருந்த ப்ரீத்தி இப்படி ஆகிட்டாரு பார்த்தீர்களா! புகைப்படத்தை கண்டு வாயை பிளந்த ரசிகர்கள்!
தற்போது கண்ணான கண்ணே சீரியலில் நடித்து வரும் ப்ரீத்தி ஷர்மா உடல் எடை குறைந்து ஒல்லியாக மாறிய ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்ளை ஆச்சர்யப்படுத்தியுள்ளார்.
தமிழில் பிரபல தொலைக்காட்சியில் ஏரளமான ஹிட் சீரியல்களில் ஹீரோயின், வில்லி என பல கதாபாத்திரங்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தவர் நடிகை ப்ரீத்தி. இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பிரபல சீரியல் நடிகரான சஞ்சீவ்வை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தளபதி விஜய்யின் நெருங்கிய நண்பரான சஞ்சீவ்வும் நடிகராவார். அவர் ஏராளமான படங்களில் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான அவர் அதனை தொடர்ந்து திருமதி செல்வம், அண்ணாமலை, கண்மணி, சித்தி 2 என பல தொடர்களில் நடித்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகு சீரியல்களில் தலைகாட்டாமல் இருந்த சஞ்சீவ் மனைவி ப்ரீத்தி 6 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சன் டிவியில் கண்ணான கண்ணே என்ற தொடரில் நடித்து வருகிறார்.
இந்து நிலையில் ப்ரீத்தி அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குண்டாக இருந்த அவர் தற்போது உடல் எடை குறைத்து ஒல்லியாக மாறிய ட்ரான்ஸ்பர்மேஷன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் அதில் அவர் கடந்த ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தையும், தற்போது எடுத்த புகைப்படத்தையும் ஒப்பிட்டு ஒரு வருடத்தில் தான் 15 கிலோ எடை குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.