#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஏழாம் வகுப்பு படிக்கும்போதே அது வந்துவிட்டதாம்! நடிகை பிரியா பவானி ஷங்கர்!
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கல்யாணம் முதல் காதல் வரை தொடரில் கதாநாயகியாக நடித்தவர் பிரியா பவானி சங்கர். இளைஞர்களையும் டிவி சீரியல் பார்க்க வைத்ததில் அம்மணிக்கு முக்கிய பங்கு உண்டு. இவருக்காகவே அந்த சீரியலை பார்த்த இளைஞர்கள் ஏராளம்.
ஒருகட்டத்தில் புகழின் உச்சிக்கு சென்ற ப்ரியா தான் நடித்த டிவி சீரியலை விட்டுவிட்டு வெள்ளித்திரை பக்கம் சென்றார். மேயாத மான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் நடிகை பிரியா பவானி சங்கர்.
அதை தொடர்ந்து இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தில் கார்த்திக்குக்கு அக்கா பொன்னாக நடித்திருந்தார். தற்போது அதர்வாவிற்கு ஜோடியாக கமிட் ஆகியுள்ளது ப்ரியா பவானி ஷங்கர் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற நடிகை பிரியா பவானி ஷங்கரிடம் முதல் காதல் குறித்து கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், நான் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒருவரிடம் காதல் வந்தது.அவர் என்னை விட பெரியவர் அது காதல் என்று சொல்ல முடியாது நான் அவரை சைட் அடிப்பேன். ஆனால், அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் அக்கா ஒருவரை காதலித்தார். அதற்கு நான் தான் உதவி செய்தேன். அப்போது எனக்கு மிகவும் கடுப்பாக இருக்கும். ஆனால், கொஞ்ச நாளிலேயே அவர்கள் இருவரும் பிரிந்து விட்டார்கள் அப்போது தான் எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது என்று நகைப்புடன் கூறியுள்ளார் நடிகை பிரியா பவானி ஷங்கர்.