யப்பா.. என் கணவருக்கு பதில் சொல்ல முடியாது.. கவர்ச்சி, முத்த காட்சிகளில் நடிக்காதது குறித்து மனம்திறந்த நடிகை.!



 Actress Priyamani about Kiss Scene Acting 

 

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பலமொழிகளில் வெளியான திரைப்படங்களில் நடித்துள்ள பிரபல நடிகை பிரியாமணி. 

இவர் திரைப்படங்கள் மட்டுமல்லாது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வருகிறார். எந்த சமயத்திலும் கிளாமரில் எல்லை மீறாமல் முத்த காட்சிகளில் நடிக்கவே மாட்டேன் என்று கண்டிஷன் போட்டு படத்தை ஒப்புக்கொள்ளும் நடிக்கையில் இவர் கவனிக்கத்தக்கவர்.

cinema news

இது குறித்து அவர் கூறுகையில், "நான் நடிக்கும் படங்களை எனது கணவர் மற்றும் குடும்பத்தினர் என அனைவரும் பார்ப்பார்கள். அவர்கள் முகம் சுளிக்க வைக்கும் வகையில் நான் நடிக்க கூடாது. 

இதனால் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதில்லை. அதேபோல இன்னொரு ஆணுடன் முத்தம் கொடுக்க எனக்கு எள்ளளவும் விருப்பமில்லை. எனது கணவருக்கு நான் பதில் சொல்ல வேண்டும்" என்று கூறியுள்ளார்.