#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதன் முதலாக தனது அம்மாவின் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராதிகா! புகைப்படம் உள்ளே!
கிழக்கே போகும் ரயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராதிகா. ராதிகாவை தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாரதிராஜா. பிரபல நடிகர் எம்.ஆர்.ராதாவின் மக்கள்தான் ராதிகா. என்னதான் வாரிசு நடிகையாக இருந்தாலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கியவர் நடிகை ராதிகா.
தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80 கலீல் முன்னணி நடிகையாக இருந்த ராதிகா பின்னர் பல்வேறு படங்களில் குணச்சித்திர நடிகையாக நடிக்க தொடங்கினர். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலபேருக்கு அம்மா கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ராதிகா.
மேலும் ராடான் மீடியா என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்திவரும் நடிகை ராதிகா அதன் மூலம் பல்வேறு டிவி தொடர்களையும் தயாரித்து வருகிறார். இவர் தயாரிப்பில், நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடர் மிகவும் பிரபலமானாவது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் மற்றும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார்தான் ராதிகாவின் கணவர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் ராதிகாவின் அம்மா யார் என்றோ அவரது புகைப்படம் பற்றியோ நாம் அறிந்திருக்க வாய்ப்புகள் குறைவுதான். ராதிகாவின் அம்மா என்று ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம் உங்களுக்காக.