பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"அஜித்தின் அந்த ஹிட் படத்தில் நான் தான் ஹீரோயினா நடிக்க வேண்டியது" ரம்பாவின் மனம் திறந்த பேட்டி..
தமிழ் சினிமாவில் 90களில் பிரபலமான நடிகையாக இருந்து வந்தவர் ரம்பா. இவரது இயற்பெயரான விஜயலட்சுமியை சினிமாவிற்காக ரம்பா என்று மாற்றிக் கொண்டார். தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து வந்தார்.
மேலும் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் போன்ற மொழித் திரைப்படங்களிலும் கதாநாயகியாக நடித்து தனக்கென தனித் திரையுலகில் நிலைநாட்டி இருக்கிறார். இவ்வாறு சினிமாவில் பிஸியாக இருக்கும்போதே தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்பு திரைத்துறையில் இருந்து விலகிய ரம்பா தற்போது மீண்டும் நடிக்க துவங்கியிருக்கிறார். இந்நிலையில் சமீபத்தில் யூ டியூப் சேனலுக்கு ரம்பா பேட்டி அளித்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் "தனது சினிமா அனுபவங்களை பகிர்ந்த ரம்பா, "உள்ளத்தை அள்ளி தா திரைப்படம் தான் என் வாழ்வில் முக்கிய கட்டத்திற்கு அழைத்துச் சென்றது. மேலும் அஜித் நடிப்பில் வெளியான 'வாலி' திரைப்படத்தில் நான்தான் நடிக்க வேண்டும். ஆனால் மிஸ் ஆகிடுச்சு" என்று கூறி இருக்கிறார்.