#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
17 வயதில் திருமணம், விரைவில் விவாகரத்து, தற்கொலை முயற்சி - வாழ்க்கையின் கரும்பக்கம் குறித்து மனம்திறந்த ரேகா நாயர்.!
தமிழில் இரவின் நிழல் படத்தில் நடித்து பிரபலமான நடிகை ரேகா நாயர். இவர் அப்படத்தில் நடித்த பின்னர், திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதனால் கடுமையாக விமர்சிக்கப்பட்டு, பின் அவருக்கு எதிராக பதிலடி சம்பவத்தில் ஈடுபட்டார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த நடிகை ரேகா நாயர், "17 வயதில், கல்லூரியில் படிக்கும்போது எனக்கு திருமணம் நடந்தது. எவ்வுளவு வேகமாக திருமணம் நடந்ததோ, அதே வேகத்தில் விவாகரத்தும் கிடைத்தது.
குடும்பச்சொத்தாக ஏக்கர் கணக்கில் நிலம் இருந்தும், வருமானத்திற்கு வழியில்லை. வீடுவீடாக சென்று பேப்பர் போட்டேன். பல சிரமங்களை கடந்து, இன்று நல்ல அடையாளத்துடன் இருக்கிறேன்.
எனது முன்னாள் கணவர் கல்விச்சான்றிதழை கிழித்ததால், ஆத்திரத்தில்-சோகத்தில் தற்கொலை செய்ய முயற்சித்தேன். 3 முறை அதற்கான முயற்சிகள் எடுத்தும் தோல்வியில் முடிந்தது. அதன்பின் நான் பல டிகிரி படித்துவிட்டேன்" என கூறினார்.