#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மன்மதராசா புகழ் நடிகை சாயாசிங்கின் கணவர் இந்த பிரபல நடிகரா? யார் தெரியுமா?
2003 ஆம் ஆண்டு இயக்குனர் சுப்பிரமணியம் சிவா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான படம் திருடா திருடி. திருடா திருடி படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் நாயகியாக நடித்திருப்பார் சாயா சிங். திருடா திருடி படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.
இந்த படத்தில் வந்த மன்மதராசா பாடல் இன்று வரை மிகவும் பிரபலமாக உள்ளது. மன்மதராசா பாடலுக்கு தனுஷ் மற்றும், சாயாசிங் இருவரும் பிரமாண்டமாக நடனம் ஆடியிருப்பார்கள்.
திருடா திருடி படத்திற்கு பிறகு சாயாசிங் ஒருசில படங்களில் மட்டுமே நடித்துள்ளார். விஜய் நடிப்பில் வெளியான திருப்பாச்சி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருப்பர். அதன்பின்னர் இவரை எந்தப்படத்திலும் காண முடியவில்லை.
அதன்பின்னர் பிரபல சீரியல் நடிகர் கிருஷ்ணா என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் சாயாசிங். நடிகர் கிருஷ்ணா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் நாடகத்தில் பிரகாஷ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.