"காலை தூக்காதீங்க.. கண்ணை கூசுது" காற்றில் பறந்த அனிகாவின் கவுன்.. கலாய்க்கும் ரசிகர்கள்.!
முதல் முறையாக வெளியான நடிகை சாய் பல்லவியின் குடும்ப புகைப்படம்! இதோ!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறிவிட்டார் நடிகை சாய் பல்லவி. மலையாளத்தில் வெளியான ப்ரேமம் திரைப்படம் மூலம் தென்னிந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகை சாய் பல்லவி. ப்ரேமம் படத்தில் இவர் நடித்திருந்த மலர் டீச்சர் கதாபாத்திரத்தின் நல்ல வரவேற்பை பெற்றது.
இதனை தொடர்ந்து மலையாளம், தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழி படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார் சாய் பல்லவி. சமீபத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் நாயகியாக நடித்திருந்தார். படம் சுமாரான வரவேற்பையே பெற்றிருந்தாலும் படத்தில் வந்த ரவுடி பேபி பாடல் மாபெரும் வெற்றிபெற்றது.
தற்போது அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவருகிறார் சாய் பல்லவி. சூர்யா நடிப்பில் வரும் மே 31 வெளியாகவுள்ள NGK படத்திலும் நாயகியாக நடித்துள்ளார் சாய் பல்லவி. இந்நிலையில் சினிமாவில் புகழ்பெற்ற இவரின் குடும்ப புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.
தாய், தந்தை, தங்கை ஆகியோருடன் சாய் பல்லவி.
— Kayal Devaraj (@devarajdevaraj) May 16, 2019
Lovely Family @Sai_Pallavi92 pic.twitter.com/2mhYxEvHLJ