#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா.. நடிகை சமந்தாவை அலேக்காக தூக்கி வந்த பிரபல டாப் நடிகர்! வைரலாகும் இந்த வீடியோவை பார்த்தீங்களா!!
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து தென்னிந்திய சினிமாவிலேயே டாப் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தெலுங்கு நடிகரான நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்த நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிவதாக சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சமந்தா பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். மேலும் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அக்ஷய் குமாருடன் நடிகை சமந்தா நடிகரும், இயக்குநருமான கரண் ஜோஹர் தொகுத்து காஃபி வித் கரண் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.
அப்போது சமந்தாவை அக்ஷய் குமார் அலேக்காக தூக்கி வந்து சுற்றுகிறார். பின் இருவரும் கரண் ஜோஹர் கேட்கும் கேள்விகளுக்கு மிகவும் கலகலப்பாக மனம திறந்து பதில் அளித்துள்ளனர். அதுமட்டுமின்றி கேம்ஸ் விளையாடியுள்ளனர், நடனம் ஆடியுள்ளனர். இந்த வீடியோவை கரண் ஜோஹர் சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்த நிலையில் வைரலாகி வருகிறது. இந்த நிகழ்ச்சி வரும் வியாழக்கிழமை ஒளிபரப்பாக உள்ளது.