#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
காதல் தோல்வியால் விரக்தியில் இருந்தநிலையில், ரகசிய திருமணம் செய்துகொண்ட சிம்பு பட நடிகை! மாப்பிள்ளை இவர்தானா? தீயாய் பரவும் வீடியோ!
தமிழ் சினிமாவில் சிம்பு நடித்த சிலம்பாட்டம் படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை சனா கான். அதனை தொடர்ந்து அவர் தம்பிக்கு இந்த ஊரு,பயணம், ஆயிரம் விளக்கு, தலைவன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மேலும் அவர் இறுதியாக விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். நடிகை சனாகான் தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு மற்றும் மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார்.
மேலும் இவர் இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பெருமளவில் பிரபலமானார். சனா கான் நடன இயக்குனர் மெல்வின் லூயிஸ் என்பவரை நீண்ட நாட்களாக காதலித்து வந்தநிலையில், கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் அவர் இனி சினிமாவில் நடிக்கப்போவதில்லை என தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் சனாகான் தொழிலதிபர் முப்தி அனாஸ் என்பவரை சூரத் நகரில் திடீரென ரகசிய திருமணம் செய்துள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள், வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஆனால் இதுகுறித்து சனாகான் எந்தவித தகவலும் வெளியிடவில்லை.