#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
90ஸ் இளசுகளின் கனவுநாயகி சங்கவிக்கு இவ்ளோ பெரிய மகளா.! அப்படியே அம்மா மாதிரியே இருக்காரே.! வைரல் புகைப்படம்!!
தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டங்களில் பல முன்னணி பிரபலங்களுடன் இணைந்து நடித்து இளசுகளின் கனவு கன்னியாக, ஃபேவரைட் ஹீரோயினாக இருந்தவர் சங்கவி. இவர் தமிழில் அஜித் நடிப்பில் வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்ற அமராவதி படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானார். பின் அவர் விஜய்க்கு ஜோடியாக ரசிகன் மற்றும் கோயம்புத்தூர் மாப்பிள்ளை ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடையே நன்கு பிரபலமானார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த சங்கவி வெங்கடேஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் சங்கவி குடும்பம், குழந்தை என செட்டிலாகிவிட்டார். மேலும் சினிமாவிலிருந்து முற்றிலும் விலகி குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வருகிறார்.
சங்கவி சமூக வலைதளங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். அவர் அண்மையில் தனது கணவர் மற்றும் மகளுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட ரசிகர்கள் சங்கவியின் மகள் அவரைப் போலவே செம கியூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர்.