பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஒரு காலத்தில் கொடிகட்டி பரந்த நடிகை சரிதாவா இது? ரசிகர்களை ஷாக்காக்கிய லேட்டஸ்ட் புகைப்படம்!
சரிதா தென்னிந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் இதுவரை 141 படங்களில் நடித்திருக்கிறார். சின்னத்திரை தொடர்களிலும் நடித்துவருகிறார். தமிழின் சிறந்த நடிகைகளில் ஒருவராக கருதப்படுகிறார் நடிகை சரிதா.
தமிழில் சரிதா நடிகையாக அறிமுகமான முதல் படம் 1978 ல் வெளிவந்த அவள் அப்படித்தான். அதில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். அதன்பின் கெ.பாலசந்தரின் தப்பித தாளா என்ற கன்னடப்படத்தில் அதே ஆண்டு நடித்தார். அந்தப்படம் தப்புத்தாளங்கள் என்ற பேரில் தமிழில் வெளியாகியது.
With Saritha... pic.twitter.com/COLF6DiAYk
— sripriya (@sripriya) January 3, 2020
அதன்பிறகு தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து கலக்கியிருந்தார். பின் நடுவில் இடைவேளை விட்டு விட்டு சினிமாவில் படங்கள் நடித்தார்.
சமீப காலமாக இவரை படங்களில் பார்க்க முடியவில்லை. தற்போது சரிதாவும் ஸ்ரீ ப்ரியாவும் சந்தித்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படத்தை ஸ்ரீ ப்ரியா ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனைப்பார்த்த ரசிகர்கள் சரிதாவா இது? என ஷாக்காகி வருகின்றனர். காரணம் அவர் அந்த புகைப்படத்தில் உடல் எடை அதிகரித்து ஆளே மாறியுள்ளார்.