#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா - கோபமாக பதிலளித்த நடிகை சாயிஷா!
தமிழில் வனமகன் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை சாயிஷா. இப்படத்தில் அவரது நடனம் மற்றும் நடிப்பிற்கே தனி ரசிகர்கள் பட்டாளம் எழுந்தது.
அப்படத்தை தொடர்ந்து நடிகர் ஆர்யாவுடன் கஜினி காந்த் படத்தில் நடித்துள்ளார். அந்த படத்தால் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவீட்டார் சம்மதத்துடன் சமீபத்தில் தான் இவர்களது திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் தற்போது நடிகை சாயிஷா மற்றும் அவரது கணவர் இருவரும் இணைந்து காப்பான் படத்தில் நடித்துள்ளனர்.திருமணத்திற்கு முன்பு கமிட்டானதால் நடித்து கொடுத்துள்ளார். தற்போது காப்பான் படத்தின் ப்ரோமோசனுக்கு செல்லும் போது பத்திரிக்கையாளர் கேள்விக்கு கோபமாக பதில் அளித்துள்ளார்.
அதாவது திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பீர்களா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு கோபமாக நடிகை சாயிஷா திருமணத்திற்கு பின் பெண்கள் அடிமைகளாக தான் இருக்க வேண்டுமா? அவர்களுக்கு என்று ஆசை, லட்சியம் கிடையாதா என கேள்வி கேட்டுள்ளார். மேலும் திருமணம் எனது கனவிற்கு முட்டுக்கட்டையாக இருக்காது எனவும் கூறியுள்ளார்.