பட வாய்ப்பு இல்லாததால் சோப்பு விற்பனைக்கு சென்ற பிரபல நடிகை! யார் தெரியுமா?



Actress shana khan started a new soap company

நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான ‘சிலம்பாட்டம்’ படத்தில் சிம்புவிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை சனா கான். இவர் ஏற்கனவே நடிகர் ஜீவா நடிப்பில் வெளியான ஈ திரைப்படத்தில் துணை கதாநாயகியாக நடித்திருந்தார். மும்பையை பூர்விகமாக கொண்ட இவர் முதலில் ஒரு மாடலாக தனது வாழ்க்கையை ஆரம்பித்தார்.

பின்னர் சினிமாவிற்குள் காலடி எடுத்துவைத்தார் நடிகை சனா கான். ஈ, சிலம்பாட்டம் படங்களை தொடர்ந்து நடிகர் பரத் நடிப்பில் வெளியான தமிபிக்கு ‘தம்பிக்கு எந்த ஊரு’, பயணம், ஆயிரம் விளக்கு போன்ற படங்களில் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் சிம்பு நடிப்பில் வெளியான ‘AAA ‘ படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் படவாய்ப்புகள் அதிகம் வராததால், புது முடிவை எடுத்துள்ளார் சனா கான். அதாவது சொந்தமாக ஒரு சிறு சோப்பு நிறுவனம் ஒன்றை ஆரம்பித்துள்ளார் நடிகை சனா. தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் தனது சோப்பு விளம்பரம் பற்றியே பேசி வருகிறார் சனா கான்.