வீட்டுக்குள்ள அடிதடி, வெளிய கொண்டாட்ட கும்மியடி.. இது பிக் பாஸ் தோழர்கள் சங்கம்.! வைரல் வீடியோ இதோ.!
ப்பா.. கண்ணே பட்டுடும் போலிருக்கே.. சேலையில் ஜொலிக்கும் தேவதையாக புன்னகையரசி சினேகா..! வைரலாகும் லேட்டஸ்ட் புகைப்படம்..!!
கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சினேகா. இவர் "என்னவளே" என்ற படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். இந்த படத்திற்க்கு பின் இவர் முன்னணி நடிகர்களான அஜித், கமல் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்தார்.
இவரின் நடிப்பால் கோடிக்கணக்கான ரசிகர்களை கட்டியிழுத்த நிலையில், கடந்த 2012-ல் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.
திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிக்க நீண்ட இடைவெளி விட்ட சினேகா, அவ்வப்போது தேர்வு செய்து படங்களில் நடித்து வருகிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் நடன நிகழ்ச்சியில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.
சமூக வலைதள பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சினேகா, தனது வீட்டில் வரலட்சுமி பூஜை செய்து குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்துள்ளார்.