#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கும் மற்றுமொரு பிரபல தமிழ் நடிகர். யார் தெரியுமா?
இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் பலரும் தனக்கு வாய்ப்பு தருவதாக கூறி படுக்கைக்கு அழைத்தது பற்றி அரை நிர்வாண போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு திரையுலகில் தொடர்ந்து பல பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்தும், யாரும் கண்டு கொள்ளாததால் தற்போது, தமிழில் பட வாய்ப்பு தருவதாக ஏமாற்றிய தமிழ் இயக்குனர்கள் மற்றும் நடிகர்கள் மீது திரும்பியுள்ளது ஸ்ரீரெட்டின்யின் பார்வை.
இதனால் தமிழ் திரையுலகமே பரபரப்பின் உச்சக்கட்டத்தில் உளது. இதுவரை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இயக்குனர் சுந்தர் .சி, நடிகர் லாரன்ஸ், நடிகர் ஸ்ரீகாந்த, சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலரது மீது பாலியல் குற்றம் சாட்டியுள்ள இவருடைய லிஸ்டில் புதிதாக இணைத்துள்ளார் மிருகம் பட நடிகர் ஆதி.
இது குறித்து ஸ்ரீரெட்டி பேசும்போது..." நடிகர் ஆதியை தான் பலமுறை ஹைதராபாதில் சந்தித்துள்ளதாகவும், தமிழ் சினிமாவில் தனக்கு வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி நடிகர் ஆதி தன்னை ஏமாற்றி விட்டார் என்று குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி. மேலும் தமிழில் தனக்கு யாரையும் தெரியாததால் அனைத்து உதவிகளையும் அவரே செய்துதருவதாகவும் கூறினார் ஆனால் அவர் கூறிய எதையும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் ஸ்ரீ ரெட்டி.
ஆதி, 'மிருகம்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். இந்த படத்தை தொடர்ந்து 'ஈரம்', 'அய்யனார்', 'ஆடுபுலி', 'அரவான்', ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் இவருடைய நடிப்பில் வெளியான 'மரகத நாணயம்' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற போதிலும் தற்போது தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.