நடிக்க ஆசைப்பட்டு 25 பேரிடம் ஏமாந்துள்ளேன்.. அசிங்கமாக உள்ளது - மன உளைச்சலில் உண்மையை உடைத்த பிரபல நடிகை..!!



actress-srireddy-speech-about-cinema

டோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் இயக்குனர் வர்ஹா இயக்கிய நேனு நன்னா அபாதம் என்ற திரைப்படத்தில் நடித்து பிரபலமடைந்தார். இதனை தொடர்ந்து கடந்த 2013-ஆம் ஆண்டு சேகர்சூரி இயக்கிய அரவிந்த் 2 என்ற திரில்லர் படத்திலும் நடித்திருந்தார். 

மேலும், ரெட்டி டைரி, கிளைமாக்ஸ் போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார். இவர் சமூகவலைபக்கத்தில் #METOO புகார்களை பதிவிட்டு வந்தார். தெலுங்கு திரையுலகம் மட்டுமின்றி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகர் ஸ்ரீகாந்த், விஷால், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் மீதும் பல புகார்களை தெரிவித்திருந்தார். 

Actress srireddy

இதனை கண்ட நெட்டிசன்கள், அவர் விளம்பரத்திற்காக இப்படி செய்வதாக கூறி வந்த நிலையில், நடிகை ஸ்ரீ ரெட்டி சமீபத்தில் அளித்த பேட்டியில் பல உண்மைகளை உடைத்துள்ளார். அதில், "நான் எப்பொழுது அரைநிர்வாண போராட்டம் நடத்தினேனோ அன்றே அனைத்தும் போச்சு. அம்மா முன்பு கூட ஆடையை மாற்றாத நான், அத்தனை பேர் முன்னிலையில் எப்படி ஆர்ப்பாட்டம் செய்தேன் என்று தெரியவில்லை.

என் அம்மா, அப்பா, தம்பி அனைவரும் என்னிடம் பேசுவது கூட இல்லை. இதனால் மன உளைச்சலில் இருக்கிறேன். என் தாய் எந்த கவலையும் இல்லாமல் என்னை பார்த்துக் கொண்டார். அந்த தருணத்தை அடிக்கடி மனதில் நினைத்து வருத்தப்படுகிறேன். சினிமாவில் நடிக்க வருபவர்கள் கிளாமராக நடிக்க வேண்டும் என வந்துவிடாதீர்கள்.

Actress srireddy

நான் கிட்டத்தட்ட 25 பேரிடம் ஏமாந்திருக்கிறேன். அவர்கள் அனைவரும் சினிமாவில் பெரிய இயக்குனர்கள், நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் எழுத்தாளர்கள். நான் இளம் நடிகைகளுக்கு சொல்வது ஒன்றுதான். நீங்கள் கவர்ச்சி காட்டுங்கள். ஆடியோ வெளியீட்டு விழா, போட்டோஷூட்டில் எல்லாம் கவர்ச்சி தேவை கிடையாது. என்னை நினைத்தால் எனக்கே அவமானமாக இருக்கிறது" என்று கூறியுள்ளார்.