#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
நடிகர் அஜித் எப்படி பட்டவர்? - சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி அதிரடி!
தெலுங்கு, தமிழ் என மாறி மாறி புகார்களை அடுக்கி வருகிறார் சர்ச்சை நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார். இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குநர் மீதும் குற்றம் சாட்டியுள்ளார் நடிகை ஸ்ரீ ரெட்டி.
முருகதாஸ், ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா ஆளுமைகளின் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் மட்டும் இல்லாமல் இந்தியா முழுக்க அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில், இளம் நடிகர் சந்தீப் பெயரையும் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கடுமையாக விமர்சித்து பதிவிட்டிருந்தார். மேலும் குஷ்புவின் கணவரும் மற்றும் நடிகரும், இயக்குநருமான சுந்தர்.சி, ஸ்ரீரெட்டியின் பட்டியலில் சிக்கினார்.
இவர்களைத் தொடர்ந்து, நடிகர் ஆதியின் மீது பாலியல் புகார் கூறிய நடிகை ஸ்ரீரெட்டி, தொடர்ந்து தொலைக்காட்சிகளில் பேட்டியளித்து, முன்னணி நடிகைகளை பற்றி தகவல்களை தெரிவித்து வருகிறார். மேலும் தமிழ் சினிமாவில் தனக்கு பிடித்த நடிகர் என்று தல அஜீத்தின் பெயரைக் கூறியிருந்தார்.
இந்நிலையில், சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் “தமிழ் சினிமாவில் எனக்கு தல அஜீத் மிகவும் பிடிக்கும். அவரின் உயரம், பார்வை, நடிக்கும் விதம், முகபாவனைகளை மாற்றும் விதம் என அனைத்தும் சிறப்பாக இருக்கும் எனவும், ஒரு நடிகருக்கான எல்லா தகுதியும் அவரிடம் இருக்கிறது” எனவும் அவர் கூறியுள்ளார்.