பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த இடத்தில் முருகனின் வேல் படத்தை பச்சை குத்திய ஸ்ருதிஹாசன்.. கடவுள் பக்தியை வெளிபடுத்த வேற இடமே கிடைக்கலையா.? ரசிகர்கள் கமெண்ட்..
தென்னிந்திய சினிமாவின் நடிகை, பாடகர், இசையமைப்பாளர் என பல்வேறு திறமைகளை கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் படங்களில் நடித்து வருகிறார். பாட்டு, நடிப்பு, காதல் என பிசியாகவே இருந்து வருகிறார் நடிகை ஸ்ருதி ஹாசன்.
பாட்டு, நடிப்பு என பிஸியாக இருந்த ஸ்ருதிஹாஷன் தற்போது நடிப்பில் சிறிது பிரேக் எடுத்துக்கொண்டு காதலிப்பதில் பிஸியாகிவிட்டார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ருதி, அடிக்கடி தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.
இதன்படி சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. பச்சை குத்திகொள்வதில் ஆர்வம் அதிகம் கொண்ட ஸ்ருதிஹாசன் ஏற்கனவே தனது உடம்பின் பின் பகுதியில் அவரது பெயரை டாட்டு குத்தியுள்ள புகைப்படம் அவரது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில், தனது பெயருடன் முருகனின் வேல் படத்தையும் பச்சை குத்தியுள்ளார். நீண்ட நாட்களாகவே ஆன்மீகமாக டாட்டூ போட வேண்டும் என்ற ஆசையில் முருக கடவுளின் வேலை பச்சை குத்தியிருக்கிறாராம். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி ரசிகர்கள் கிண்டலாய் கமெண்ட் செய்து வருகின்றனர்.