#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல இளம் நடிகை சுனைனாவுக்கு கொரோனா பாதிப்பு!! அவரே கூறிய தகவல்!! அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
பிரபல நடிகை சுனைனாவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தகவல் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காதலில் விழுந்தேன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை சுனைனா. காதலில் விழுந்தேன் படத்தை அடுத்து பல்வேறு படங்களில் நடித்துள்ள இவருக்கு தமிழ் சினிமாவில் குறிப்பிட்ட அளவில் ரசிகர்கள் உள்ளனர். தற்போது தொடர்ந்து படங்களில் நடித்துவரும் இவர் சமீபத்தில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தெரிவித்துள்ள சுனைனா, "பலத்த எச்சரிக்கையுடன் இருந்தும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளேன். கொரோனா விதிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டிருக்கிறேன். என் குடும்பத்தினர் தவிர வேறு யாருடன் தொடர்பு கொள்ளவில்லை என்பதால் அவர்களும் தனிமையில் உள்ளனர். அனைவரும் முகக்கவசம் அணியுங்கள், வீட்டிலேயே பாதுகாப்பாக இருங்கள். அனைவருக்கும் என் பிரார்த்தனைகள்". என பதிவிட்டுள்ளார்.
— SUNAINAA (@TheSunainaa) May 10, 2021