#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
திடீர் ரகசிய திருமணம் செய்துகொண்ட நடிகை சுனைனா? திருமணம் அவரே கூறியுள்ள தகவல்!
சன் பிக்சர்ஸ் தயாரித்த காதலில் விழுந்தேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை சுனைனா. இந்த படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இதனை அடுத்து மாசிலா மணி படத்திலும் நகுலுக்கு ஜோடியாக நடித்தார்.
இரண்டு படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தாலும் அடுத்ததாக சுனைனாவுக்கு சொல்லிக்கொள்ளும் அளவிற்கு எந்த படமும் கைகொடுக்க வில்லை. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சில்லு கருப்பட்டி என்ற படத்தில் நடித்துள்ளார் சுனைன்னா..
இந்த படம் நேற்று வெளியாகிய நிலையில் பலரும் சுனைனாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் சுனைனா திடீரென ரகசிய திருமணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து ரசிகர் ஒருவர் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா என சுனைனாவிடம் கேள்வி எழுப்பியிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள சுனைனா, தனக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை என்றும், திருமணம் நடந்தால் நிச்சயம் எல்லோருக்கும் அறிவிப்பேன், இதுபோன்ற வதந்திகளை யார் கிளப்பிவிடுகிறார்கள் என்று தெரியவில்லை எனவும் பதிலளித்துள்ளார்.
சமீபத்தில் ஆண் நண்பர் ஒருவருடன் சுனைனா நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அவர்தான் சுனைனாவின் காதலர் என்றும், அவரைத்தான் சுனைனா ரகசியமாக திருமணம் செய்துகொண்டதாவும் ரசிகர்கள் கூறிவந்தது குறிப்பிடத்தக்கது.