#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சினிமா மட்டும் இல்லை, எனக்கு வேறு தொழிலும் கைவசம் உள்ளது - நடிகை டாப்ஸி பரபரப்பு
தமிழில் தனுஷுடன் ஆடுகளம் படத்தில் அறிமுகமாகிய நாயகி தான் டாப்ஸி. தான் நடித்த முதல் படத்திலே ரசிகர்களை கவர்ந்தார்.
தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் மட்டும் நடித்து வந்த நடிகை டாப்ஸி பொலிவுட்டிலும் தனக்கென்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் தரும் படங்களாக டாப்ஸியை தேடி நடித்து வருகிறார். இவ்வாறு தனக்கென்று ஒரு தனி முத்திரை பதித்து அபார நடிப்பால் அசத்திக் கொண்டிருந்தார்.
இந்நிலையில் அவர் "தனி மனுஷியாக எனக்கு தோல்வியை கண்டு பயம் இல்லை. அதை நீங்கள் திரையில் பார்க்கிறீர்கள் என்று நினைக்கிறேன். தோல்வி ஏற்பட்டால் அத்துடன் வாழ்க்கையே முடிந்துவிடுமா என்ன? நான் மீண்டும் முயற்சி செய்வேன். என் படங்கள் தோல்வி அடைந்தால் நான் வேறு ஏதாவது செய்வேன். அத்துடன் என் வாழ்க்கை முடிந்துவிடாது.
நானும் என் தங்கை ஷகுனுடன் சேர்ந்து உணவகம் துவங்க திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன். சினிமா துறைக்கு சம்பந்தமில்லாத பிற விஷயங்களையும் செய்ய விரும்புகிறேன். எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகுவது என்றால் அதனுடன் தொடர்பில்லாத பிற தொழில் என் கைவசம் இருக்க வேண்டும்.
சினிமாவை தாண்டி வாழ்க்கை இருப்பது நல்லது என்று தெளிவாக புரிந்துள்ள டாப்ஸி, திருமண வேலைகள் அனைத்தையும் செய்து கொடுக்கும் வெட்டிங் பிளானர் தொழிலை சைட் பிசினஸ் ஆகா செய்து வருகிறார். தன்னுடைய கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் கிடைக்கத் துவங்கிவிட்டது" என்று நம்பிக்கையுடன் பேசியுள்ளார் நடிகை டாப்ஸி.