#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்னை பார்த்து எப்படி கேட்பாய்? நீங்களும் கொஞ்சம் வாங்களேன் - நடிகை டாப்சி ஆவேசம்..!
காஞ்சனா 2, ஆடுகளம், கேம் ஓவர் போன்ற தமிழ் படங்களில் நடித்த பிரபலமடைந்தவர் நடிகை டாப்ஸி. இவருக்கு பாலிவுட்டில் "பிங்க்" படத்தின் மூலம் பாராட்டுகள் கிடைத்த நிலையில், கங்கணாவை விட இவர் வசம் அதிக படங்கள் குவிந்தன.
ஆனால் நடிகை டாப்ஸியின் நடிப்பில் வெளியான படங்கள் சமீபகாலமாக அவருக்கு கை கொடுக்காத நிலையில், தற்போது தமிழில் ஜெயம் ரவியின் ஜன கண மன படத்திலும், ஹிந்தியில் இயக்குனர் அனுராக் காஷ்யப் இயக்கியுள்ள டோபாரா படத்திலும் நடித்துள்ளார்.
இந்த படம் வரும் 19ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் மும்பையில் இப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், நடிகை டாப்ஸி தாமதமாக வந்ததாகவும், ஏன் லேட்? என பத்திரிக்கையாளர் ஒருவர் கேட்டுள்ளார்.
அதற்கு "எனக்கு சொன்ன டைமுக்கு தான் நான் வந்திருக்கேன். என்னை எப்படி லேட்ன்னு சொல்லலாம் என்று பத்திரிகையாளரிடம் கேட்டுள்ளார். மேலும் நான் கேமரா முன்னாடி நிற்கிறேன். எது செய்தாலும் தவறாகத்தான் தெரியும். கொஞ்சம் நீங்களும் கேமரா முன்னாடி வந்து பேசினால், எப்படி கேள்வி கேட்டீங்கன்னு புரியும்" என்று கூறியுள்ளார்.
தற்போது டோபாரா படத்தை தடை செய்ய பாலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்தால் நெகட்டிவ் பப்ளிசிட்டியாவது கிடைக்கும் என்று சமீபத்தில் அனுராக் காஷ்யப் மற்றும் டாப்சி பேசிய நிலையில், பத்திரிக்கையாளர்களுடன் டாப்ஸி இவ்வாறு பேசியது பிரமோஷன் யுக்தியாக இருக்குமா? என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.