#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஸ்ரீரெட்டி யார் என்றே எனக்கு தெரியாது! பின்வாங்கும் பிரபல தமிழ் நடிகை!
நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலபேர் மேல் பாலியல் குற்றச்சாட்டை கூறி அரை நிருவாண போராட்டம் நடத்தியவர் நடிகை ஸ்ரீ ரெட்டி.
தெலுங்கு நடிகை, ஸ்ரீரெட்டி நடத்திய அரை நிர்வாண போராட்டம் தெலுங்கு மட்டுமின்றி தென்னிந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல தெலுங்கு நடிகர் உட்பட பல இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் மீதும் நடிகை ஸ்ரீரெட்டி பாலியல் புகார் கூறினார்.
இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு பிரபல தமிழ் இயக்குனர்கள் முருகதாஸ், சுந்தர் சி, நடிகர்கள் ஸ்ரீகாந்த், ராகவா லாரன்ஸ் என தமிழ் சினிமா நட்சத்திரங்கள் மீது தொடர்ந்து ஸ்ரீரெட்டி பாலியல் புகாரை கூறி வருது தமிழ் சினிமா உலகில் அதிர்ச்சியை யார்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, தனது முகநூல் பக்கத்தில், “என்னை ஏமாற்றியவர்கள் லிஸ்ட் பெரியது என சிலர் நினைக்கின்றனர். அது உண்மையல்ல, சிலபேர் மட்டுமே என்னை ஏமாற்றியுள்ளனர். தற்போது முன்னணி நடிகையாக உள்ள நடிகைகள் சிலர் வாயை திறந்து உண்மையை கூறினால், அவர்களை பயன்படுத்தியவர்களின் லிஸ்டை கேட்டால் அதுகேட்டு அதிர்ச்சியில் நீங்கள் மரணமடைந்து விடுவீர்கள்” என்று கூறி சில நடிகைகளின் பெயரில் வரும் முதல் மற்றும் கடைசி எழுத்துக்களை குறிப்பிட்டிருந்தார் சர்ச்சை நாயகி ஸ்ரீ ரெட்டி.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை திரிஷாவிடம் உங்களை பற்றியும் ஸ்ரீரெட்டி பேசியிருக்கிறார் அதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள் என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகை த்ரிஷா, எனக்கு ஸ்ரீரெட்டின்னா யாருன்னே தெரியாது. தேவையில்லாம பேசி ஸ்ரீரெட்டிய பெரிய ஆளாக்க வேண்டாம் என்று கூறினார்.