பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அரசியலில் நுழைகிறாரா நடிகை திரிஷா?..! முக்கிய கட்சியில் சேர்வதாக பரபரப்பு தகவல்..! எதிர்பார்ப்பில் ரசிகர்கள்..!!
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. இவர் நடித்த பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைந்துள்ளது. தற்போது இவர் பொன்னியின் செல்வன் என்ற படத்தில் நடித்துள்ள நிலையில், அப்படம் வரும் செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.
அந்த படத்தில் திரிஷா குந்தவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது திரிஷாவுக்கு 39 வயதாகும் நிலையில், எப்பொழுது திருமணம் செய்து கொள்வார்? என்பது தான் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரும் கேள்வியாக இருக்கிறது.
ஆனால் இதனை கண்டு கொள்ளாத நடிகை திரிஷா தனது திரைபயணத்தை தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில் திரிஷா அரசியலில் நுழைய இருப்பதாக தகவல்கள் பரவி வருகிறது.
மேலும் அவர் காங்கிரஸ் கட்சியில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் அரசியலுக்கு வருவார் என்று பலரால் எதிர்பார்க்கப்படுகிறது.