#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பிரபல நடிகையின் வருங்கால கணவரை சீரியலில் களமிறக்கும் விஜய் டிவி! அதுவும் எந்த சீரியலில் தெரியுமா?
பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டி.வியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியலான ராஜா ராணியில் ஹீரோ சஞ்சீவிற்கு முதலில் தங்கையாக நடித்தவர் வைஷாலி தனிகா.பின் ஒரு சில காரணங்களால், இந்த சீரியலில் இருந்து விலகினார்.மேலும் இவர் மாப்பிள்ளை சீரியலில் ஶ்ரீஜாவின் தங்கையாகவும் நடித்திருந்தார்.
நடிகை வைசாலி பைரவா, ரெமோ, யங் மங் சங், சீமராஜா, சர்க்கார் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அஞ்சலி என்ற தொடரில் நடித்து வருகிறார்.
மேலும் இவருக்கு சமீபத்தில் அவரது காதலன் சத்யதேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இந்நிலையில் சத்யதேவ் அஞ்சலி சீரியலில் வைஷாலிக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு வைசாலி கூறியுள்ளார்.