பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இருந்து திடீரென விலகிய பிரபல நடிகை!! ஏன், என்னாச்சு? அவரே வெளியிட்ட ஷாக் வீடியோ!!
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், அனைவருக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் வகையில் ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற தொடர் பாண்டியன் ஸ்டோர். குடும்பக் கதையான இத்தொடர் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரையும் பெருமளவில் கவர்ந்துள்ளது.
மேலும் அண்ணன், தம்பி பாசத்தை மையமாகக் கொண்ட பாண்டியன் ஸ்டோர் தொடரில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா, வெங்கட், குமரன் மற்றும் காவியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த சீரியலில் தனம் கதாபாத்திரத்தில் நடித்த சுஜிதாவின் அண்ணியின் அக்கா மகளாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடிகை வைஷாலி தனிகா நடித்து வந்தார். இந்த நிலையில் அவர் திடீரென சீரியலை விட்டு விலகியுள்ளார்.
இது குறித்து ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதிலளித்து வைஷாலி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர், அனைவரும் ஏன் பாண்டியன் ஸ்டோர் சீரியலை விட்டு விலகிவிட்டீர்கள் என்று கேட்கிறார்கள். ஆனால் உண்மையிலேயே எனக்கு அதற்கான காரணம் தெரியவில்லை. யாரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை. இதற்கு மேல் அந்த காரணத்தை நான் தெரிந்து கொள்ளவும் விரும்பவில்லை.
ரொம்ப சிறிய கதாப்பாத்திரமாக இருந்தாலும் ஐஸ்வர்யா கதாபாத்திரத்திற்கு நீங்கள் கொடுத்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. அதேபோல் தற்போது நான் நடித்து கொண்டிருக்கும் கோகுலத்தில் சீதை மற்றும் மகராசி சீரியல் ளுக்கும் தொடர்ந்து ஆதரவு கொடுங்க என்று கூறியுள்ளார்.