#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முத்தம் கொடுக்க சென்று.. ஸ்டார் நடிகருடன் நெருக்கமாக நடிகை வனிதா.! வைரல் புகைப்படம்! ஷாக்கான ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதியரின் மகள் வனிதா. அவர் விஜய்யுடன் சந்திரலேகா என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து சினிமாவில் அறிமுகமானார். பின்னர் அவர் பெருமளவில் படங்களில் நடிக்கவில்லை. திருமணமாகி சினிமாவிலிருந்து விலகினார்.
பின்னர் திருமணம் மற்றும் சொந்த வாழ்க்கையில் பல சர்ச்சைகளை சந்தித்த அவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானார். மேலும் நிகழ்ச்சியில் பல விமர்சனங்களை சந்தித்த அவர் மூன்றாவது திருமணம், விவாகரத்து என சமூக வலைத்தளத்தில் பேசுபொருளாக இருந்தார். ஆனால் எதனையும் பொருட்படுத்தாமல் அவர் படங்கள், பிசினஸ், யூடியூப் சேனல் என பிசியாக இருந்து வருகிறார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் அவர் உதட்டை குவித்து வைத்து பவர் ஸ்டார் சீனிவாசனின் கன்னத்தில் முத்தம் கொடுப்பதுபோல போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அது வைரலான நிலையில் அதனை கண்ட நெட்டிசன்கள் என்னம்மா இது.! என ஷாக்காகியுள்ளனர்.