#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த வயசுல இப்படி ஒரு கவர்ச்சி போஸ் தேவையா... வைரலாகும் புகைப்படத்தால் வனிதாவை வெச்சு செய்யும் நெட்டிசன்கள்!!
தமிழ் சினிமாவில் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் விஜயுடன் இணைந்து சந்திரலேகா என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. அதுமட்டுமின்றி இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மூத்த மகள் ஆவார். இவர் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.
நீண்ட கால இடைவெளிக்கு பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றியாளரான வனிதா புதிதாக யூடியூப் சேனல் ஒன்றினை தொடங்கி மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில் தற்போது வனிதா சமூக வலைத்தளத்தில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். அவ்வப்போது சர்ச்சைகளில் சிக்கி வரும் வனிதா தற்போது மெர்லின் மன்றோவை போல் தனது அலங்காரத்தை மாற்றிக் கொண்டு, கவர்ச்சி உடையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த நெட்டிசன்கள் 42 வயதில் இந்த தோற்றமும், கவர்ச்சி உடையும் ஓவர்தான் என்று கிண்டல் செய்து வருகின்றனர்.