பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
சிம்பு பட நடிகையை கலாய்த்து வரும் நெட்டிசன்கள்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் ஒரு சில திரைப்படங்களில் மட்டும் நடித்து அறியப்படும் நடிகையாக வலம் வருபவர் வேதிகா. இவர் தமிழில் முதன் முதலில் 'மதராசி' திரைப்படத்தின் மூலம் சினிமா துறையில் காலடியெடுத்து வைத்தார்.
இப்படத்திற்கு பின்பு காஞ்சனா 3, காளை, முனி, சக்கரகட்டி, பரதேசி போன்ற ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார். இப்படங்களில் இவரது கதாபாத்திரம் பெரிதும் பேசப்படவில்லை என்பதால் இவருக்கு தமிழ் சினிமாவில் பட வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
இது போன்ற நிலையில், சமூக வலைத்தளங்களில் வேதிகாவின் இன்ஸ்டாகிராம் பதிவை நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர். அப்பதிவில் வேதிகா கூறியதாவது, "விலங்குகள் உணவிற்காக துன்புறுத்தப்படுவது மிகவும் கொடூரமான செயல்.
விலங்குகளை கொல்வதை விட்டுவிட்டு வன்முறை இல்லாத சைவத்தை தேர்வு செய்யுங்கள்" என்று பதிவிட்டு இருக்கிறார். இப்பதிவில் நெட்டிசன்கள் "செடி கொடிகளுக்கு வாய் இல்லை என்பதால் அவற்றை உண்பீர்களா? செடி கொடிகளுக்கும் உயிர் உள்ளது. எதுவும் சாப்பிடாமல் இருங்கள் அதுதான் நல்லது. மேலும் நீங்கள் அணியும் ஆடையும், உங்களது பேக்கும் லெதர்ரில் செய்தது தானே அதை ஏன் வாங்குகிறீர்கள்" என்று கமெண்ட் செய்து கலாய்த்து வருகின்றனர்.