#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
16 வயசுலையேவா? நடிகை வேதிகா கூறியதை கேட்டு அதிர்ச்சியான ரசிகர்கள்! என்ன விஷயம் தெரியுமா?
நடன இயக்குனரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் முனி. சுமார் 11 வருடங்களுக்கு முன்பு வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றிபெற்றது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகர் ராஜ்கிரண் நடித்திருந்தார்.
இந்த படத்தில் ராகவா லாரான்ஸுக்கு ஜோடியாக நடிகை வேதிகா நடித்திருந்தார். முனி படம் மாபெரும் வெற்றிபெற்றதை அடுத்து காஞ்சனா என்ற பெயரில் இதன் பாகங்கள் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் காஞ்சனா படத்தின் மூன்றாம் பாகம் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த படத்தின் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நடிகை வேதிகா பேசுகையில் முனி படத்தில் அவர் நடிக்கும்போது அவருக்கு வயது வெறும் 16 தானம். மிக சிறிய வயதில், கதாப்பாத்திரத்தை உள்வாங்கி, திருமணம் ஆன பெண்ணகவும் வேதிகா நடித்திருந்தார். இந்நிலையில் அந்த சிறு வயதில்லையே நடிகை வேதிகா அப்படி நடித்ததை கேள்விப்பட்ட ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.