#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியிலிருந்து விலகிய நடிகர் வெங்கட்! ஏன்? இதுதான் காரணமா??
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் தொடர்கள் ஏராளம். அவ்வாறு ரசிகர்களை கவர்ந்த சீரியல்களில் ஒன்றுதான் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பி பாசம், கூட்டுக்குடும்பம் ஆகியவற்றை மையமாகக் கொண்டு இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்த தொடரில் பாசக்கார நான்கு சகோதரர்களில் ஒருவராக ஜீவா என்ற கதாபாத்திரத்தில் அசத்தலாக நடித்து வருபவர் வெங்கட் ரங்கநாதன். இவர் இதற்கு முன்பு பல தொலைக்காட்சித் தொடர்களில் நடித்துள்ளார். நடிகர் வெங்கட் மனைவி அஜந்தா. அவர்களுக்கு தேஜஸ்வினி என்ற அழகிய மகள் உள்ளார்.
வெங்கட் மற்றும் அவரது மகள் இருவரும் விஜய் டிவியில் சூப்பர் டாடி என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அசத்தலாக விளையாடி வந்தனர். இந்த நிலையில் தற்போது இருவரும் அந்த நிகழ்ச்சியில் இருந்து விலகியுள்ளனர். அதாவது வெங்கட், பாண்டியன் ஸ்டோர்ஸ் படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் இந்நிகழ்ச்சியில் இருந்து விலகியதாக கூறப்படுகிறது.