பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
பிரபல காமெடி நடிகரின் மகளை புகழ்ந்து தள்ளிய நடிகர் விஜய் - காரணம் என்ன தெரியுமா?
விஜய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் 'பிகில்'. இந்த படத்தை அட்லீ இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது.
பிகில் படத்தில் நயன்தாரா, விவேக், டேனியல் பாலாஜி, ஜாக்கி ஷெராப், கதிர், சவுந்தரராஜா, யோகி பாபு, இந்துஜா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தற்போது காமெடி நடிகர் ரோபோ சங்கர் அவர்களின் மகள் விஜயுடன் முதல் முறையாக நடித்துள்ளார். அவர் நடித்த முதல் படத்திலேயே நடிகர் விஜய் அவரை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
நடிகர் விஜய் ரோபோ சங்கரிடம் உங்கள் மகள் அருமையாக நடிக்கிறார். மேலும் எங்க வீட்டு மகள் மாதிரி பார்த்து கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.