#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தளபதி 63 ல் விஜய்க்கு அக்காவாக நடிப்பது இந்த நடிகையா? வெளியான தகவலால் குஷியான ரசிகர்கள்!!
தெறி, மெர்சலை தொடர்ந்து விஜய் அட்லீயுடன் கூட்டணியில் இணைந்து மூன்றாவது முறையாக நடித்துவரும் படம் விஜய் 63. இப்படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வருகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தில் பாடலாசிரியர் விவேக்கும் இடம்பெற்றுள்ளார்.
மேலும் விஜய் 63 படம் விளையாட்டை மையமாக கொண்டு உருவாகி வருகிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். மேலும் இவர்களுடன் நடிகர்கள் கதிர், ஆனந்தராஜ், டேனியல் பாலாஜி, யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மேலும் விஜய்யின் 63வது படத்தில் விஜய்க்கு அக்காவாக பிரபல நடிகை தேவதர்ஷினி நடிக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனை கேட்ட ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில் அதற்கான படிப்பிடிப்புகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.