#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாவ்.. வேற லெவல்! ஏழைக் குழந்தைகளின் ஆசைகளுக்காக நடிகர் ஆதி செய்த காரியம்! கொண்டாடும் ரசிகர்கள்!!
தமிழ் சினிமாவில் மிருகம், ஈரம், அரவான், யாகவராயினும் நா காக்க உள்ளிட்ட பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஆதி. நடிப்பு மட்டுமின்றி சமூக சேவைமிக்க மனப்பான்மை கொண்ட அவர் குடிசைப் பகுதிகளில் வாழும் ஏழைக் குழந்தைகளின் கனவுகளை அறிந்து கொண்டு அவர்களுக்கு ஆலோசனை வழங்கிவரும் தி லிட்டில் பாக்டரி என்ற தொண்டு நிறுவனத்தின் ஆலோசகராக உள்ளார்.
இந்த நிலையில் நடிகர் ஆதி இந்த தொண்டு நிறுவனத்தின் மூலம் குடிசைப் பகுதிகளை சேர்ந்த திறமைமிக்க 6 முதல் 9 வயது நிறைந்த ஆறு குழந்தைகளை தேர்வு செய்து, அவர்களுக்கு மிகவும் பிடித்த, போட ஆசைப்படும் விலையுயர்ந்த உடைகளை வாங்கிக் கொடுத்துள்ளார்.
மேலும் அந்த உடையில் அவர்களை புகைப்படம் எடுத்து அதையே இந்த ஆண்டு காலண்டராக தயார் செய்து அந்த குழந்தைகளுக்கு பரிசாகவும் கொடுத்துள்ளார். இதனைக் கண்ட குழந்தைகள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இத்தகைய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகும் நிலையில் அதனைக் கண்ட பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.