#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலாகலமாக திருமண பந்தத்தில் இணையும் ஆதி- நிக்கி கல்ராணி ஜோடி! எப்போ தெரியுமா??
தமிழ் சினிமாவில் டார்லிங் படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நிக்கி கல்ராணி. அதனை தொடர்ந்து அவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், யாகாவாராயினும் நாகாக்க, கோ 2, , கடவுள் இருக்கான் குமாரு, மொட்டசிவா கெட்டசிவா, மரகத நாணயம் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி தமிழில் மிருகம், ஈரம், ஆடுபுலி, அரவான் உள்ளிட்ட படங்களில் நடித்த
பிரபல நடிகரான ஆதியை காதலித்து வருவதாக கூறப்பட்டது. ஆதி- நிக்கி கல்ராணி இருவரும் யாகாவாராயினும் நாகாக்க, மரகத நாணயம் போன்ற படங்களில் ஒன்றாக இணைந்து நடித்துள்ளனர்.
அதனை தொடர்ந்து இருவருக்கும் மிகவும் எளிமையாக கடந்த மார்ச்சில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அந்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்த நிலையில் தற்போது சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் வருகிற மே 18 ஆம் தேதி ஆதி மற்றும் நிக்கி கல்ராணிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும் அன்று மாலை வரவேற்பு விழா நடைபெற உள்ளதாகவும் கூறப்படுகிறது.