#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மார்க் ஆண்டனி பட இயக்குனருக்கு திருமணமா.. யாருடன் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வளர்ந்து வருபவர் ஆதிக் ரவிச்சந்திரன். இவர் தமிழில் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளியான 'த்ரிஷா இல்லனா நயன்தாரா' திரைப்படத்தை இயக்கினார். ஆனால் இப்படம் பெரிதளவில் வெற்றி பெறவில்லை.
இப்படத்திற்கு பின்பு தொடர்ந்து பகீரா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார். சமீபத்தில் விஷால், எஸ் ஜே சூர்யா நடிப்பில் வெளியான 'மார்க் ஆண்டனி' திரைப்படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கினார்.
இப்படம் திரையரங்கில் வெளியாகி மிகப்பெரும் வெற்றி அடைந்தது. இதனை அடுத்து அஜித் நடிப்பில் திரைப்படம் இயக்கப் போவதாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
இது போன்ற நிலையில், ஆதிக் ரவிச்சந்திரன் பிரபல நடிகர் பிரபுவின் மகளை திருமணம் செய்ய போவதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் இதுவரை தெரியவில்லை.