பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அந்த ஒரு சம்பவத்தால் நான் 8 மாதம் வாய்ப்பு இல்லாமல் இருந்தேன்! பிரபல நடிகை!
பிரபல இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான காற்று வெளியீட்டை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை அதிதி! அதனை தொடர்ந்து மீண்டும் மணிரத்தினம் இயக்கிய செக்க சிவந்த வானம் படத்தில் நடித்திருந்தார்.
தற்போது உதயநிதியுடன் சைக்கோ படத்திலும், தனுஷ் இயக்கி நடிக்கும் படத்திலும் நடித்து வருகிறார். இந்தி, தெலுங்கிலும் கவனம் செலுத்துகிறார். இந்நிலையில் பெண்களுக்கு எதிராக நடந்து வரும் பாலியல் தொல்லைகள் பற்றியும், MeToo பற்றியும் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதில் அளித்த அதிதி, நானும் பாலியல் தொல்லையால் பாதிக்கபட்டுளேன்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், என்னை ரொம்பவே பொத்திப் பொத்தி வளர்த்துவிட்டார்கள். அதனால் சினிமா துறைக்கு வந்தபோது ரொம்ப அப்பாவியாக இருந்தேன். ஒரு சமயம் ஒரு மோசமான சம்பவம் என்னுடைய வாழ்க்கையிலும் வந்தது. அப்படி செய்தால்தான் எனக்கு பட வாய்ப்பு கிடைக்கும் என்றால் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு தேவை இல்லை என்று கூறி நடையை கட்டினேன்.
அதில் இருந்து சுமார் 8 மாதம் எனக்கு எந்த வாய்ப்பும் கிடைக்கவில்லை. ஆனால் அதன் பின்னர் எனக்கு வாய்ப்பு கிடைத்தது என்று அதிதி கூறியுள்ளார்.