#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மீண்டும் போலீசில் புகார் கொடுத்த தாடி பாலாஜி மனைவி!! பாலாஜியின் பதிலடி!!
தமிழ் சினிமாவில் ஒரு சில படங்களில் காமெடி நடிகராகவும், பிரபல தனியார் தொலைக்காட்சியின் காமெடி நிகழ்ச்சியில் நடுவராகவும் இருந்து வருபவர் தாடி பாலாஜி. இவரது மனைவி நித்யா. இவர்களுக்கு போஷிகா என்ற பெண் குழந்தை உள்ளது.
இவர் பிக் பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களிடையே பெருமளவில் பிரபலமானார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு முன்பு இவருக்கும், இவரது மனைவிக்கும் இடையே நடந்த குடும்ப சண்டை தமிழகம் முழுவதும் தெரியவந்தது. இதனை அடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கணவன் மனைவி இருவரும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சி இவர்கள் இருவரையும் ஒன்று சேர்த்தது.
இந்நிலையில் தடி பாலாஜி மனைவி நித்யா மீண்டும் போலீசில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார், அதில் தாடி பாலாஜி தன்னையும் தன் மகளையும் அடித்து துன்புறுத்துவதுடன், ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த தாடி பாலாஜி, தன் மீது நித்யா வேண்டுமென்றே வீண் பலி சுமத்துவதாகவும், தான் எந்த தவறும் செய்யவில்லை என்றும் கூறியுள்ளார். மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருவதாகவும் தாடி பாலாஜி போலீசாரிடம் கூறியுள்ளார்.