#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ராஷ்மிகா மந்தானாவை குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த ஐஸ்வர்யா ராஜேஷ்..
கோலிவுட் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையினை தேர்ந்தெடுத்து தற்போது நடித்தவருகிறார்.
சமீபத்தில் இவர் நடித்த வெளியான 'பர்ஹானா' திரைப்படம் மதவெறுப்பை தூண்டும் விதமாக இருக்கிறது என்று படத்திற்கு தடை விதிக்க இஸ்லாமிய அமைப்பு கோரிக்கை விடுவித்த விடுத்தது.
இதனையடுத்து 'பர்ஹானா' திரைப்படம் வெளியான பிறகு ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. திரைபிரபலங்களும் இப்படத்திற்கு வாழ்த்து கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற நிலையில், தெலுங்கு மொழியில் 'பர்ஹானா' திரைப்படம் வெளியாகவிருக்கிறது. இப்படத்தின் பிரமோஷனிற்காக பத்திரிக்கையாளர்கள் பேட்டியில் பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ் தெலுங்கில் நான் 'வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்' எனும் திரைப்படத்தில் மட்டுமே நடித்திருக்கிறேன். தெலுங்கில் தொடர்ந்து திரைப்படங்கள் நடிக்க வேண்டும் என்று ஆசை. சமீபத்தில் வெளியான 'புஷ்பா' திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தானா சிறப்பாக நடித்திருந்தார். புஷ்பா திரைப்படத்தில் வள்ளி கதாபாத்திரத்தில் என்னால் இதைவிட நன்றாக நடித்திருக்க முடியும் என்று ராஷ்மிகாவை மட்டம் தட்டும் விதமாக பேசிய இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.