பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
"எனக்கு ஆண்களை பிடிக்கும் நான் அந்த மாதிரி பொண்ணு இல்ல" சர்ச்சையை கிளப்பும் விதமாக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.?
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் தமிழில் பல திரைப்படங்களில் நடித்த முன்னணி கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தனது திரை வாழ்க்கையை தொலைக்காட்சி தொகுப்பாளராக ஆரம்பித்தார்.
இதன்பின் சினிமாவில் 'அவர்களும் இவர்களும்' என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து உயர்திரு 420, சட்டப்படி குற்றம், அட்டகத்தி, ஆறாது சினம், வணக்கம் நான் பேய் பேசுறேன், மனிதன், தர்மதுரை, குற்றமே தண்டனை போன்ற பல திரைப்படங்களில் நடித்த ரசிகர்களின் மனதை கவர்ந்தார்.
சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'பர்ஹானா' திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. தற்போது 'தீராகாதல்' திரைப்படத்தின் நடித்து இப்படம் திரையரங்கில் வெளியாகியிருக்கிறது. தீரா காதல் திரைப்படத்திற்கான பிரமோஷனில் கலந்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷ் பேசிய வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியை மையப்படுத்தி படங்கள் நடித்து வருவதால் இவரை பெமினிஸ்ட் என்று பலர் கூறுகின்றனர். இதனை மேடையில் கூறி நான் ஃபெமினிஸ்ட் இல்லை. எனக்கு ஆண்களை பிடிக்கும் என்று பேசி இருக்கிறார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி ஃபேமினிஸ்ட்களுக்குஆண்களை பிடிக்காதா என்று ரசிகர்கள் கிண்டலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.