முதலில் நோ சொல்லி, தற்போது ஓகே சொன்ன தல அஜித்! யார் படத்திற்கு தெரியுமா?



Ajith confirmed vinoth story for next movie

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித். அதிக ரசிகர்களை கொண்ட நடிகர் என்ற பெருமையும் இவருக்கே உண்டு. தற்போது தல அஜித் தற்போது பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகின்றார். ஹிந்தியில் நடிகர் அமிதாப்பச்சன் நடித்து சூப்பர் ஹிட் ஆன இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என்று டைட்டில் வைத்துள்ளனர்.

இதற்க்கு முன்னர் அஜித் நடிப்பில் வெளியான விசுவாசம் படம் நல்ல வரவேற்பை பெற்றதால், நேர்கொண்டப்பார்வை படம் மீதும் ரசிகர்கள் மத்தியில் செம்ம வரவேற்பில் உள்ளது. நேர்கொண்ட பார்வை படத்திற்கு முன்னதாகே அஜித் இயக்குனர் வினோத் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. 

Ajith Kumar

ஆனால் இதற்கு மும்பு வினோத் சொன்ன  கதையில் அஜித்துக்கு திருப்தி இல்லையாம்.
ஆனால், போனிகபூர் கேட்டதால், வினோத் மீண்டும் வேறு கதையை ரெடி செய்து கொடுக்க, அஜித்திற்கு அந்த கதை  மிகவும் பிடித்துவிட்டதாம், உடனே ஓகே சொல்லிவிட்டாராம். எனவே நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு அஜித் மீண்டும் வினோத் இயக்கத்தில் நடிக்கவே அதிக வாய்ப்புள்ளது.